--- --:--:-- --

இந்தோனேசியா, சிங்கப்பூரில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் இந்தியாவின் அருணாச்சலிலும் லேசான நில அதிர்வு

9.1

இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் அருகே இன்று அதிகாலை ரிக்டர் அளவில் முறையே 6.3 மற்றும் 6.1 ஆக அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்திலும் ரிக்டரில் 3.4 என்ற அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டது.

 

அருணாச்சல பிரதேசம், இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூரில் இன்று அதிகாலை அடுத்தடுத்து 3 இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அருணாச்சலின் தவாங் அருகே அதிகாலை 1.33 மணிக்கு லேசான முதல் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 3.4 ஆக பதிவான நிலையில் பெரும் சேதம் ஏற்படவில்லை என்றாலும் நிலப்பகுதியில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்தவர்களால் நன்கு உணரப்பட்டு மக்கள் பீதியடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அருணாச்சலில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த 3 மணி நேரத்தின் இந்தோனேசியாவின் வடக்கே 142 கி.மீ. தூரத்தில் உள்ள சேமராங்க் பகுதியை மையமாக வைத்து ரிக்டரில் 6.3 அளவாகவும், அடுத்த சில நிமிடங்களில் சிங்கப்பூருக்கு தென்கிழக்கே 1102 கி.மீ. தொலைவில் ரிக்டரில் 6.1 அளவில் என இரு பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடல் பகுதியில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தால் பெரிய அளவிலான சேதம் எதுவும் இல்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon