காவல்நிலையத்தில் மது அருந்திய போலீசார் பணியிடை நீக்கம்..!
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் காவல் நிலையத்திலேயே மது அருந்திய மூன்று போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்துபுரம் இரண்டாவது நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர்கள் திருமறையோர், முகமது மற்றும் போபால் நாயக் ஆகியோர் காவல் நிலையத்தில் உள்ள ஒரு அறையில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர்கள் தங்கள் காவல் நிலையத்தில் உள்ள ஒரு அறையில் மது அருந்திய காட்சியை சமூகவலைதளத்தில் வெளியாகி வைரல் ஆனது. இதனையடுத்து அந்த மூன்று பேரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சத்திய இயேசு பாபு பணியிடை நீக்கம் செய்தும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.







