பிரசவத்தின் பொது சுயநினைவை இழந்த கர்ப்பிணி பெண்! நினைவை வரவழைத்த மருத்துவர்கள்!
புதுக்கோட்டையில் பிரசவ அறுவை சிகிச்சையின் போது சுயநினைவை இழந்த பெண்ணுக்கு நவீன கருவிகளின் உதவியோடு மீண்டும் நினைவு வரவழைத்து மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் வியக்க வைத்துள்ளனர். மணமேல்குடி அருகே உள்ள விச்சூர் பகுதியை சேர்ந்த கிளாடிஸ் கீதா என்ற பெண்ணுக்கு இரண்டாவது பிரசவத்திற்காக கடந்த 10ஆம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
மறு நாள் வயிற்றில் இருந்த பொருட்கள் மூச்சு பாதைக்குள் சென்றதை அடுத்து அவர் சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்று உள்ளார். மேல்சிகிச்சைக்காக அந்த பெண் கடந்த 11ஆம் தேதி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அதி நவீன கருவிகளின் உதவியோடு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
சிகிச்சையின் ஏழாவது நாளில் இயற்கையாக சுவாசிக்க தொடங்கியவர் முழு குணமடைந்து வீடு திரும்பினார். சுயநினைவு இழந்த பெண்ணை காப்பாற்றி மிகப்பெரிய சாதனை செய்த மருத்துவர்களுக்கு மருத்துவமனை முதல்வர் மீனாட்சி பாராட்டுகளை தெரிவித்தார்.






