தங்கம் ஒரு சவரன் ரூ.37,000ஐ தாண்டியது..!
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 37 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை நேற்று 4 ஆயிரத்து 610 ரூபாயாக இருந்தது. அந்த விலை இன்று 25 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 635 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதேபோல் நேற்று சவரன் தங்கம் விலை 36 ஆயிரத்து 880 ரூபாயாக இருந்தது. அந்த விலை இன்று 200 ரூபாய் அதிகரித்து 37 ஆயிரத்து 80 ரூபாயாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை அதிகரித்த நிலையில் வெள்ளியின் விலை சிறிது அளவு குறைந்துள்ளது. கிலோ வெள்ளி 53 ஆயிரத்து 600 ஆக இருந்த நிலையில் இன்று 300 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 300 ரூபாயாக உள்ளது.






