--- --:--:-- --

சாலையை உடைத்துக்கொண்டு திடீரென வெளியேறிய தண்ணீர்! தப்பிய கார்கள்!

13

துருக்கியின் சாலையில் அடியில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் வெடித்து சிதறியதில் இரு கார்கள் நூலிழையில் தப்பிய வீடியோ வெளியாகியுள்ளது. போர்ட்ரம் என்ற இடத்தில் சொகுசு விடுதியில் தங்கியிருந்த சிலர் அங்கிருந்து காரில் புறப்பட்டனர். முதல் வாகனம் சென்ற சில வினாடிகளில் அடுத்த வாகனம் அதனை பின்தொடர்ந்தது. அப்போது சாலையின் அடியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் திடீரென வெடித்தது.

 

இதனால் குழாயிலிருந்து நீர் வேகமாக வெளியேறி பொங்கிப் பிரவாகம் எடுத்தது இதனை கண்ட கார் ஓட்டுனர் அங்கிருந்து தனது காரை நகர்த்தி தப்பி சென்றார். இந்த விபத்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. குழாய் வெடித்ததில் அப்பகுதியில் 5 மீட்டர் சுற்றளவுக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon