கொரொனா வார்டில் இருந்து தப்பியோடிய நபர் சடலமாக கூவம் ஆற்றில் இருந்து மீட்பு!
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய கொரொனா பாதித்த நபர் கூவம் ஆற்றில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். திருவல்லிக்கேணி பகுதியில் கூவம் ஆற்றில் மிதந்த ஆணின் உடலை மீட்ட தீயணைப்பு துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அந்த நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்த 65 வயதான புருஷோத்தமன் என்பதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. கடந்த 15-ம் தேதியில் இருந்து திடீரென காணாமல் போன அவர் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்த புருஷோத்தமன் குடும்பத்தினரையும் அழைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.






