நாளை துபாய் செல்கிறார் விஜய்..!
தமிழக முதலமைச்சர் செப்.10-ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், தனது பயணத்தை முடித்துக் கொண்டு செப்.16-ம் தேதி மீண்டும் சென்னை திரும்ப உள்ளதாகவும் தமிழகக் காவல்துறையின் பாதுகாப்புப் பிரிவு சி.ஐ.டி (Security Branch CID) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (செப்.9) காலை 11:00 மணியளவில் சென்னை பழைய விமான நிலைய சடங்கு வரவேற்பறை (Old Airport Ceremonial Lounge, Gate No.6) பகுதியில் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு பாதுகாப்புப் பிரிவு சிஐடி காவல் கண்காணிப்பாளர் (SP-II) ஜி.எஸ். மாதவன் தலைமை தாங்குகிறார்.
இதுதொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர், இந்திய விமான நிலைய ஆணைய இயக்குநர் (AAI), தென்பிராந்திய சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்புப் பிரிவு (BCAS) மண்டல இயக்குநர், மத்திய தொழிற்பாதுகாப்புப் படை (CISF) டிஐஜி, சென்னை விமான நிலைய மூத்த குடிவரவு அதிகாரி (Immigration Officer), சுங்கத்துறை முதன்மை ஆணையர் (Customs), எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மேலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறை உயரதிகாரிகளுக்கு அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மாநகர காவல் (பாதுகாப்பு) துணை ஆணையர் மற்றும் பரங்கிமலை (St. Thomas Mount) துணை ஆணையர் ஆகியோர் ஒருங்கிணைந்து, விமான நிலைய அதிகாரிகள், பிசிஏஎஸ் (BCAS), குடியுரிமைப் பிரிவு, சுங்கத்துறை, சுகாதாரத்துறை, உணவுப் பாதுகாப்பு–மருந்து நிர்வாகத் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் அனைவரும் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




