ஒரே நாளில் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை..!
தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.14,270-க்கும், சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.1,14,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் படி இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.125 குறைந்து ரூ.14,145க்கும், சவரனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1,13,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.125 குறைந்து ஒரு கிராம் ரூ.11,915க்கும், சவரனுக்கு ரூ.1,000 குறைந்து ஒரு சவரன் ரூ.95,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.255க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




