--- --:--:-- --

ஆர்.எஸ்.பாரதி ஜாமீன் மனு தொடர்பாக உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்வி!

1

திமுக எம்பி ஆர்எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்வதில் இவ்வளவு அக்கறை காட்டுவது ஏன் என்று மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

 

சென்னையில் கடந்த பிப்ரவரியில் கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி நீதிபதிகள் மற்றும் பட்டியல் இன மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது. இது தொடர்பான புகாரில் பட்டியலினத்தவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில் ஆர் எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சதீஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

 

அப்போது மாநில அரசு கவனிக்க வேண்டிய ஏராளமான பிரச்சனைகள் நிறைய உள்ள நிலையில் ஆர்எஸ் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய அதிக அக்கறை காட்டுவது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர் வழக்கு விசாரணையை வரும் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon