தமிழ்நாட்டில் முதன்முறையாக கொரோனாவுக்கு 15 வயது சிறுவன் உயிரிழப்பு!
அரியவகை தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த 15 வயது சிறுவன் ஒருவன் கொரொனா பாதிப்பால் உயிரிழந்தது தமிழகத்தில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வாழ்க்கையை துன்பத்தோடு கடந்து கொண்டிருந்த சிறுவனை மேலும் துன்பத்திற்கு ஆளாக்கி உயிரை பறித்துள்ளது கொரோனா எனும் அரக்கன்.
டுஜன் மஸ்குலர் டிஸ்ட்ரோபி எனப்படும் தசைச் சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்த 15 வயது சிறுவனுக்கு சளி, இருமல், காய்ச்சல் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவனுக்கு கொரொனா தொற்று இருப்பது.
உறுதியானது அந்த வைரஸ் தனது வீரியத்தை காட்ட மூச்சுத் திணறல் அதிகமானதால் ஜூன் 12ஆம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவனுக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு குளுக்கோஸ் மூலமாகவே உடலுக்கு தேவையான சத்துக்கள் அளிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென இதயம் செயலிழப்பு ஏற்பட்டு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
பல ஆண்டுகள் தசைச் சிதைவு நோயால் அவதியுற்று வந்த சிறுவன் கொரோனா வைரசால் நிமோனியா காய்ச்சல் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கொரொனா தொற்றினால் 15 வயது சிறுவன் உயிரிழந்தது தமிழகத்தில் இதுவே முதல் முறை.






