அரசு அறிவித்துள்ள அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் இயங்கி பொது மக்களின் பாராட்டை பெற்று வரும் பெரியநாயக்கன்பாளையம் சார்பதிவாளர் அலுவலகம் !!!
கொரோனா எனும் கொடிய அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதோடு லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக 4 வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அமலில் உள்ளது.3 ஆம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பின் போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.இதில் அரசு அலுவலகங்கள் குறைந்த அளவு ஊழியர்களைக் கொண்டு இயங்க அரசு அனுமதித்துள்ளது. அதேபோல் பத்திரப்பதிவு அலுவலகங்களும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இயங்கி வருகிறது.

இதில் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகம் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் சிறப்பாக செயல்படுத்தி பொதுமக்களிடம் பாரட்டைப் பெற்றுவருகிறது.

பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் போதிய சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு பின்னர் கபசூரண குடிநீர் வழங்கப்படுகிறது.பத்திரம் பதிவு செய்ய வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக முக க்கவசங்களும் வழங்கப்பட்டு வருகிறது.அலுவலக வாயிலில் அமைக்கப்பட்டிருக்கும் தானியங்கி கிருமி நாசினி மூலம் கைகளை கழுவிய பிறகு தேர்தல் மீட்டர் மூலம் உடல் வெப்பத்தை பரிசோதிக்கின்றனர்.

பின்னர்,பத்திரப்பதிவுகளையும் மேற்கொள்கின்றனர். அதேபோல் அலுவலகத்தின் உள்ளே மற்றும் வெளியே ஒருநாளைக்கு 3 முறை கிரிமி நாசினி தெளித்து சுத்தம் செய்கின்றனர்.அரசு அறிவித்துள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பெரியநாயக்கன்பாளையம் பத்திரப்பதிவு அலுவலக துணை பதிவாளர்கள் ராமமூர்த்தி மற்றும் பூபதிராஜா ஆகியோர் சிறப்பாக செய்து வருவதால் கொரோனா அச்சமின்றி தைரியமாக பத்திரப்பதிவு செய்ய வருவதாக பாராட்டி வருகின்றனர்.






