தாயம் விளையாடும் போது ஏற்பட்ட விபரீதம்…..கொலையில் முடிந்த சம்பவம்!
சேலத்தில் தாயம் விளையாட்டில் ஏற்பட்ட ஒரு மோதலில் மூட்டை தூக்கும் தொழிலாளர் ஒருவர் பரிதாபமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். ஊரடங்கில் வீட்டில் இருக்காமல் நண்பர்களுடன் தாயம் விளையாட சென்றவர் உயிருடன் இல்லை. தாயம் விளையாட்டில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது எப்படி?
சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்த வேலு நகரைச் சேர்ந்தவர் 40 வயதான செல்வம். சின்னக்கடை வீதியில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் பேருந்து நிறுத்தம் அருகே ரத்த வெள்ளத்தில் விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார் அவர் வயிற்றில் கத்திக்குத்து காயங்கள் இருந்தார்.
அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய சிறுது நேரத்தில் உயிரிழந்தார். அவர் இதற்கு முதற்கட்ட விசாரணையில் சீலநாயக்கன்பட்டியில் அவருடன் சிலர் தகராறு செய்ததாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் சீலநாயகன் பட்டியை சேர்ந்த 63 வயது மாணிக்கம் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தபோது உண்மை வெளியானது.
ஊரடங்கில் பொழுது போகாத தொழிலாளர்களான மாணிக்கம், செல்வம் உள்ளிட்டோர் ஒன்று சேர்ந்து கடந்த 26ஆம் தேதி சீலநாயக்கன்பட்டி யில் பணம் வைத்து தாயம் விளையாடும் விளையாட்டில் தோற்ற செல்வம் தன்னுடைய தோல்வியை ஒத்துக் கொள்ளாமல் தான் தோற்றதை தரும்படி கேட்டுள்ளார்.
மேலும் விளையாட்டில் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் தகராறில் ஈடுபட்ட மாணிக்கத்தின் கன்னத்தில் அறைந்துள்ளார். ஆத்திரமடைந்த மாணிக்கம் செல்வத்தை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி வேலூர் பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை இரவு செல்வம் நடந்து வந்தபோது அவரது வயிற்றில் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்துமாணிக்கம் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தாயம் விளையாட்டில் கொலையில் முடிந்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






