--- --:--:-- --

பெற்றோரை காண நடந்தே சென்ற சிறுவன்! உதவிய காவலர்கள்!

6

ஊரடங்கில் கடும் சிரமங்களுக்கு இடையே சொந்த மண்ணை தேடியும் உறவுகளை தேடியும் பயணப்படுவது நாடு முழுவதும் தொடர்கிறது. அந்த வகையில் தனது பெற்றோரை பார்க்க புறப்பட்டான் ஒரு பள்ளி மாணவன். தனது பெற்றோரை பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் படிந்த முகம் நடந்து நடந்தே களைத்துப்போன கால்களுடன் இருக்கும் ஆனந்த் குமார் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர்.

 

படிக்கும் பிள்ளையை சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் கோனுரிலேயே விட்டுவிட்டு பெற்றோர் கரூர் மாவட்டம் சோம்பூரில் செங்கல் சூளை வேலைக்கு சென்றனர். ஊரடங்கால் பெற்றோர் அங்கேயே தங்கிவிடவீட்டில் தனித்து இருக்க முடியாமல் பெற்றோரின் நோக்கி புறப்பட்ட சிறுவன் கோனூர் கிராமத்தில் இருந்து திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையை பிடித்து 30 கிலோமீட்டர் நடந்து வந்துள்ளான்.

 

சிறுவனை கண்ட காவல்துறையினர் விவரம் கேட்டு பெரம்பலூர் வரை செல்லும் வாகனத்தை நிறுத்தி ஏற்றி விட்டுள்ளனர் .அதை தொடர்ந்து பெரம்பலூர் 4 ரோடு பகுதியில் வழி தெரியாமல் திகைத்து நின்ற மாணவனை பணியில் இருந்த போக்குவரத்து காவலர் துறையூர் செல்லும் லாரி ஒன்றில் ஏற்றி அனுப்பி வைத்தனர் .

 

அவர்களுக்கு கவலை தோய்ந்த முகத்துடன் கை கூப்பி நன்றி தெரிவித்த சிறுவனின் முகம் காண்போர் மனதை உலுக்கி விட்டது. நிறுத்தி வைக்கப்பட்ட பதினோராம் வகுப்பு தேர்வு வேறு உள்ளது.

 

பேருந்து வசதி இல்லாமல் சொந்த ஊர் திரும்பி தேர்வு எழுத முடியுமா என்ற கவலை இருந்தாலும் பெற்றோரை நோக்கி உறுதியுடன் சென்ற சிறுவன் நாடுமுழுவதும் அல்லல்படும் எத்தனையோ பேரின் பிரதிநிதியாக தருகிறான் என்றால் மிகையல்ல.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon