புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் இயங்கும்

புதுச்சேரியில் நாளை முதல் பேருந்துகளை இயக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுபான கடைகளும் செயல்பட உள்ளதாக அம்மாநில அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்திருக்கிறார்.

 

நாடு முழுவதும் வரும் 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரியில் மேற்கொள்ளப்பட உள்ள தளர்வுகள் குறித்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. தனிமனித இடைவெளியை கடைபிடித்து நாளை முதல் உள்ளூர் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

ஆட்டோக்களில் இருவர் மட்டும் செல்லவும், கார், கால் டாக்ஸியில் ஓட்டுனர் உள்ளிட்ட 3 பேர் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் என 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

பெரிய மார்க்கெட்டில் உள்ள மீன் அங்காடியை திறக்கவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும் கடந்த 56 நாட்களாக மூடப்பட்டு உள்ள மதுபான கடைகளையும் நாளை முதல் திறக்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.


Leave a Reply