--- --:--:-- --

மனைவியை சுத்தியலால் தாக்கி கொலை செய்த கணவன் தானும் தற்கொலை!

8.1

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக வருமானம் இன்றி தவித்து வந்த மதுபான கடை பணியாளர் மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். பின்னணி என்ன?

 

செங்கல்பட்டு மாவட்டம் வல்லாஞ்சேரி அண்ணா தெருவில் மதுக்கடை ஊழியர் ஸ்டீபன் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு மூன்று மனைவிகள், ஆறு குழந்தைகள், முதல் மனைவி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். கொரொனா ஊரடங்கால் மதுக்கடைகள் மூடப்பட்டதால் வருமானமின்றி இரண்டு மனைவிகள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.

 

வல்லாஞ்சேரியில் வசிக்கும் தனது மூன்றாவது மனைவியான உமாவிடம் ஸ்டீபன் சென்று பணம் கேட்டு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இருவருக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக மாறியது. ஆத்திரமடைந்த ஸ்டீபன் அருகில் இருந்த சுத்தியலை எடுத்து உமாவின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த உமா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

மனைவியை கொலை செய்து .விட்டோமே என்ற அதிர்ச்சியால் அதே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் ஸ்டீபன். திங்கள்கிழமை காலை உறவினர்கள் உமா வெகுநேரம் திறக்கப்படாததால் கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே இருவரும் சடலமாக இருந்தது தெரியவந்தது.

 

கூடுவாஞ்சேரி காவல் துறையினர் ஸ்டீபன் மற்றும் உமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கனாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொரொனா முழு அடைப்பால் வருமானத்தை இழந்த மதுக்கடை ஊழியர் குடும்பத்தின் சோக முடிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon