சென்னையில் ஒரே தெருவில் வசிக்கும் 13 பேருக்கு கொரொனா!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா வீரியத்தில் தமிழகத்தின் டாப் லிஸ்டில் இருக்கும் சென்னையில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்படும் கொரொனா எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மிரட்டும் கொரொனாவால் மக்கள் பீதியில் உறைந்து கிடைக்க மயிலாப்பூர், மீனாம்பாள்புரம் பகுதியில் ஒரே நாளில் ஒரே தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கும் 13 பேர் .6 மாத பச்சிளம் குழந்தை முதல் 8 வயது சிறுமி வரை, குழந்தைகள், பெண்கள் என பாதிக்கப்பட்ட 13 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

தரமணி வி ஹெச் எஸ் தனியார் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றும் பெண் தொழிலாளி ஒருவர் மீனாம்பாள் புரத்தில் வசித்து வந்துள்ளார். அவருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அந்தப் பெண் மூலம் 13 பேருக்கு பரவி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

முன்னதாக திங்கள்கிழமை அம்பத்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட பாடிகுப்பம் பகுதியில் ஒரே தெருவில் வசிக்கும் 13 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டில் கொத்தமல்லி வியாபாரம் செய்து வந்த 50 வயது வியாபாரி இதே தெருவில் வசித்து வந்தார்.

 

கொரொனாவால் பாதிக்கப்பட்ட நபர் கடந்த 22ஆம் தேதி வரை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு சென்று கொத்தமல்லி வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருடன் கொத்தமல்லி வாங்கிய பலரும் இப்பொழுது அதிர்ச்சியில் உறைந்து கிடக்கின்றன.

 

ஊரடங்கு காலத்தை விடுமுறை காலமாக கருதி அக்கம் பக்கத்து வீடுகளுக்கு வாங்க பழகலாம் என்பதுபோல சென்று வருவது விபரீதத்தில் முடியும் என்பதையே இந்த நிகழ்வு உணர்த்தியுள்ளது.


Leave a Reply