கொரொனா நோயாளிகளை நெருங்காமலே சிகிச்சை அளிக்க உதவும் “V2 BUDDY” ரோபோ!
கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் உதவுவதற்காக “V2 BUDDY” என்ற செவிலியர் ரோபோவை சென்னை ஏவிஐடி விநாயகா மிஷன் ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் 2 தொழிலதிபர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். கொரொனா நோயாளிகளை செவிலியர்கள் நேரடியாக கையாள்வதை தவிர்க்கும் வகையில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.
நோயாளியின் உடல் வெப்ப நிலையை பார்ப்பது ஹேண்ட் சானிடைசர் வழங்குவது, மருந்து மற்றும் உணவுகளை வழங்குவது ஆகிய பணிகளை இந்த ரோபோ மேற்கொள்ளும். செவிலியர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே இந்த ரோபோவை இயக்கலாம். செவிலியர்களும், நோயாளிகளும் தனிநபர் இடைவெளியை கடைபிடித்து உரையாட ரோபோவில் ஆடியோ வீடியோ வசதிகளுடன் அரசு மருத்துவமனையில் இந்த ரோபோவின் செயல்விளக்கம் காட்டப்பட்டது.

கொரொனாவால் மருத்துவ பணியாளர்களின் முக்கிய தேவையான தனிநபர் பாதுகாப்பு கவசங்கள் ஏறத்தாழ 50 சதவீதம் பெங்களூரில் உற்பத்தி செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிபிஇ எனப்படும் கவசங்கள், பாதுகாப்பு கண்ணாடிகள், கையுறைகள், உடல் கவசங்கள் உள்ளிட்டவற்றின் தேவை நாளொன்றுக்கு ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது.
இந்த தனிநபர் பாதுகாப்பு கவசங்கள் 100 சதவீத பாதுகாப்பு அளிப்பதாக இருக்க வேண்டும் என்பதால் அதற்கான தொழில்நுட்ப உதவியை சுகாதார அமைச்சகம் இந்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் லேட்டக்ஸ் ஆகியன வழங்கி வருகின்றன. பெங்களூரு தவிர தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் திருப்பூரில் குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட வேறு மாநிலங்களிலும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் தயார் செய்யப்படுகின்றன.






