லைக்குகளுக்காகவும் , கெத்துக்காகவும் சிறுத்தைக்கு தீ வைத்து டிக் டாக் வெளியிட்ட இளைஞர்கள்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஊர் அடங்கி வீட்டுக்குள் அடங்க மறுக்கும் கால்களைக் கொண்ட காளையர்கள் அவ்வப்போது கும்பலாக சுற்றி போலீசிடம் வாங்கிக் கட்டிக் கொள்வது ஒரு வகை என்றால் செய்யும் தவறை வீடியோவாக பதிவிட்டு வீடு தேடி வர வழைக்கும் டிக் டாக் சக்கரவர்த்திகள் புதுவகை. அந்த வகையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த மைப்பகுதி மலை இடுக்கு ஒன்றில் சிறுத்தை சிக்கி இருப்பதாக கூறி தீ வைத்து எரித்த நான்கு தம்பிகள் அதை வீடியோவாக எடுத்து டிக்டாக்கில் பதிவேற்றம் செய்தனர்.

 

இதனை பார்த்து டிக் டாக் அடிமைகள் சிலர் பாராட்டியுள்ளனர். தகவலறிந்த வனத்துறையினர் சிறுத்தைக்கு தீ வைத்ததாக கூறி டிக் டாக் வீடியோ வெளியிட்ட சக்கரவர்த்திகள் 4 பேரையும் சுற்றி வளைத்தனர் டிக்டாக்கில் பெறுவதற்காக இல்லாத சிறுத்தையை தீ வைத்து எரித்ததாக கதை விட்டதாக டிக்டாக்கில் கதறினார். கடல்புறா நாகராஜ் அவர்களிடம் சிறுத்தை சிக்கவில்லை என்றாலும் காட்டிற்கு தீ வைத்த குற்றத்திற்காக 4 பேரும் வனத்துறையினரிடம் வசமாக சிக்கிக் கொண்டனர்.

 

4 பேரையும் கைது செய்த வனத்துறையினர் தலா 30 ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். 4 பேரையும் வரிசையாக திருமணப் பந்தியில் அமர வைப்பது போல தரையில் உட்கார வைத்து குழு புகைப்படம் எடுப்பதுபோல டிக் டாக் வீடியோ எடுத்து அவரது டுவிட்டரில் பதிவேற்றம் செய்தனர்.

 

கொரொனா ஊரடங்கிற்கு கட்டுப்படாமல் காட்டுக்குள் வெட்டுக்கிளிகள் போல வலம் வந்தால் எந்த மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சான்றாக நிகழ்ந்திருக்கிறது இந்த சம்பவம்.


Leave a Reply