--- --:--:-- --

லென்ஸ்களை அணிய வேண்டாம்..! கொரோனா பரவ வாய்ப்பு!

7

கான்டக்ட் லென்ஸ்களை கண்களில் அணிந்து இருப்போருக்கு கொரொனா பரவ வாய்ப்பு இருப்பதால் அதை கழற்றி வைத்துவிட்டு கண்ணாடிகளை அணியும்படி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கண்ணாடி அணிவதை சிரமமாக கருதி கான்டக்ட் லென்ஸ்களை அணியும் வழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது.

 

இந்நிலையில் அமெரிக்கன் அகாடெமி ஆப் ஆஃப்தமாலஜி எனும் அமைப்பை சேர்ந்த நிபுணர்கள் கான்டக்ட் லென்ஸ்களை அணியவும், அதை கழற்றவும் கண்களை ஒன்றுக்கு மேற்பட்ட முறை தொட வேண்டியிருக்கும் எனவும் கை கழுவ மறந்து அவர்களை தொட நேரிட்டால் சம்பந்தப்பட்ட நபருக்கு கொரொனாபரவ வாய்ப்பிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர்.

 

ஆதலால் கான்டக்ட் லென்ஸ்களை கழற்றி வைத்துவிட்டு கண்ணாடிகளை அணியும்படி கூறியுள்ளார்கள். இதனால் கொரொனா பரவாமல் தடுக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon