இந்தியாவில் கொரோனாவிற்கு மேலும் ஒருவர் பலி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கர்நாடகாவில் மேலும் ஒருவர் கொரொனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். இதனால் இந்தியாவில் கொரொனா விவசாய பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலம் தும்கூர் அரசு மருத்துவமனையில் டெல்லியில் இருந்து ரயில் மூலம் வந்த 65 வயது முதியவர் கொரொனா வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்தார்.

 

இந்த நிலையில், முதியவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கர்நாடகாவில் கொரொனாவால் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் புதிதாக 6 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 830 ஆக அதிகரித்துள்ளது.

 

அதிகபட்சமாக கேரளாவில் 137 பேருக்கு காரணம் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றுவரை அதிக பாதிப்புடன் முதலிடத்தில் இருந்த மகாராஷ்டிரா இன்று இரண்டாம் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 130 பேருக்கு கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இதற்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் 55 பேருக்கு கொரொனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் பாதிப்பிலிருந்து குணம் அடைந்து 67 பேர் வீடு திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply