ஊரடங்கை மதிக்காமல் ஊரை வலம் வந்த 4 பெண்கள்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : Arrangemets


கொரொனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரியில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒரு இருசக்கர வாகனத்தில் நான்கு பெண்கள் சுற்றி தெரியும் புகைப்படம் மக்களிடையே முகசுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கொரொனா பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இந்தநிலையில் வெளிநாட்டினர் அதிகம் வாழும் பகுதியான புதுச்சேரியில் நான்கு பெண்கள் ஒரு இருசக்கர வாகனத்தில் சுற்றி திரிந்து உள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

மக்களின் பாதுகாப்பு கருதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.


Leave a Reply