--- --:--:-- --

இது என் ஊரு,என் கோட்டை…அப்படிதான் சுற்றுவேன்..முதலமைச்சர வர சொல்லு..!

4

கொரொனா நோய்க்கிருமியை கட்டுப்படுத்துவதை விட அடங்க மறுத்து அத்து மீறும் இவர்களைப் போல தம்பிகளை சமாளிப்பது காவல்துறையினருக்கு சற்று கடினமான பணிதான். இது என்னுடைய ஊரு, என்னுடைய கோட்டை இப்படித்தான் சுற்றுவேன் உத்தரவு போட்ட முதலமைச்சர் அவரை சொல்லு என்று போலீசாரிடம் நெஞ்சு வெடிக்க முழங்கும் இந்த தம்பி அடுத்து நடக்கவிருக்கும் சம்பவத்தை அறிந்து இருக்க வாய்ப்பில்லை.

 

கட்சி மேடைகளில் யாரை வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். கையை நீட்டி குரலை உயர்த்தி என்ன வேண்டுமானாலும் பேசலாம் சம்பந்தப்பட்ட கட்சியினரை தவிர யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் நாடு முழுவதும் அவரை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருக்கும் சமயத்தில் கையை உயர்த்தி குரலை உயர்த்தி உடம்பை முறுக்கினாள் இப்படி சில அடிகள் விழத்தான் செய்யும்.

ஊருக்குள் கடைகள் எல்லாம் அடைத்திருக்க செருப்பு வாங்கப் போவதாக விளக்கம் அளித்தபடி டிப்ளமோ இன்ஜினியரிங் தம்பி முக கவசம் உள்ளிட்ட எந்த ஒரு முன்னெச்சரிக்கை எதையும் பின்பற்றாமல் இருசக்கர வாகனத்தில் ஊருக்குள் சுற்றியதோடு அதைக் கண்டித்த பெண் போலீசாரிடம் வீம்புக்கு உலக அரசியல் தொடங்கி உள்ளூர் அரசியல் வரை முடங்கியதால் மண்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

 

பொதுவாக அரசியல் மேடையில் பேசுவோர் கத்தி விட வாய்ப்புண்டு. இணையத்தில் போலி கணக்கில் இதுபோல இஷ்டத்திற்கு பேசி விட்டு தப்பி விடலாம். ஆனால் இப்படி வீதியில் வீம்பு பேசும் தம்பிகள் போலீஸிடம் இருந்து தப்பிக்க வாய்ப்பே இல்லை என்பதை உணர வேண்டும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon