கொரோனா சிகிச்சை: 25% படுக்கைகளை தயார் செய்ய தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு உத்தரவு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரோனா சிகிச்சைக்காக 25 சதவீத படுக்கைகளை உடனே ஏற்படுத்துமாறு தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு இந்த அறிவுறுத்தலை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.

 

நவீன வசதிகளுடன் கூடிய அறைகளை மற்ற வார்டுகளில் இருந்து தனிமைப்படுத்தி வைத்து இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தனியார் மருத்துவமனைகளை அறிவுறுத்தியுள்ளது. அரசின் உத்தரவை அமல்படுத்த தவறினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Leave a Reply