கொரொனா வைரஸ் வடிவிலான பர்கர்!
கொரொனா அச்சுறுத்தலால் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ள மக்களை உற்சாகப்படுத்தும் வகையில் வியட்னாமில் விற்பனை செய்யப்படும் கொரொனா வைரஸ் வடிவிலான பர்கர் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
ஹானோய் நகரில் செய்யப்படும் பீட்சா கடையில் கொரொனா வைரஸ் போன்று வடிவமைக்கப்பட்ட பர்கர்களுக்கிடையே சீஸ், தக்காளி, இறைச்சி உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
கொரொனா வடிவிலான பர்கரை சாப்பிடும்போது வைரஸை வென்றது போன்ற நேர்மறை உணர்வை பெற முடியும் என்று பீட்ஸா கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.






