--- --:--:-- --

குடிக்கும் மக்களை நாங்கள் என்ன செய்ய முடியும்..? டாஸ்மாக் வருமானம் அதிகரிப்புக்கு காரணம் கூறிய அமைச்சர் தங்கமணி!!

15

மக்கள் குடிக்கிறார்கள்; அதனால் டாஸ்மாக் வருமானமும் அதிகரிக்கிறது. குடிக்கும் மக்களை நாங்கள் என்ன செய்ய முடியும் என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

 

தமிழகத்தில் மது குடிப் போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க, டாஸ்மாக் வருவாயும் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. தமிழக அரசின் பட்ஜெட் படி, அரசுக்கு பெரும் வருவாய் ஈட்டித் தரும் காமதேனுவாக டாஸ்மாக் விளங்குகிறது. இந்தாண்டு தமிழக அரசின் மொத்த வருவாய் ரூ. 2 .16 லட்சம் கோடி என்றால், அதில் டாஸ்மாக் மூலம் மட்டும் 34,000 கோடி ரூபாய் வருவாய் என கூறப்படுகிறது. இதில் ஆண்டுக்கு இவ்வளவு விற்பனை என்ற இலக்கும் நிர்ணயிக்கப்பட்டு விற்கப்படுகிறது. சரக்குகளின் விலையும் சமீபத்தில் அதிரடியாக உயர்த்தப்பட்டு கூடுதல் வருவாய் ஈட்ட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 

இதனால், டாஸ்மாக் வருவாயைத்தான் தமிழக அரசு பெரிதாக நம்புகிறதா? என்ற கேள்வியை, திமுக எம்எல்ஏ இன்று சட்டப் பேரவையில் எழுப்பினார். அத்துடன் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடுவோம் என்ற அறிவிப்பு என்னாச்சு ? எவ்வளவு கடைகள் மூடப்பட்டுள்ளன? என்ற கேள்வியையும் எழுப்பினார்.

 

இதற்கு அமைச்சர் தங்கமணி பதிலளிக்கையில், ஒரே கையெழுத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூடுவோம் என நாங்கள் சொல்லவில்லை; படிப்படியாகத்தான் மூடுவோம் என்றுதான் கூறியுள்ளோம். மொத்தம் 6815 கடைகளில் 1000 கடைகளை மூடியுள்ளோம். திமுக ஆட்சியில் ஒரு கடையாவது மூடப்பட்டதா? என்று கேள்வி எழுப்பினார். அத்துடன் பூரண மது விலக்கு தான் அதிமுக அரசின் கொள்கை என்றும் கூறினார்.

 

தொடர்ந்து மதுபானங்களின் விலை அதிகரித்ததாலும், மக்களும் குடிப்பதாலும் டாஸ்மாக் வருவாய் அதிகரித்துள்ளது. மக்கள் குடிக்கும் போது நாங்கள் என்ன செய்ய முடியும் என்றும் சாதாரணமாக அமைச்சர் தங்கமணி கொடுத்த விளக்கம் அதிர்ச்சி ரகமாகத் தான் உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon