--- --:--:-- --

கிராமப்புறங்களுக்கு வருகிறது ‘மொபைல்’ ரேஷன் கடைகள்..! சட்டப்பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜு தகவல்!!

13

பகுதி நேர ரேஷன் கடைகளுக்கு பதிலாக நகரும் ரேஷன் கடைகள் அமைப்பது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

 

கிராமப்புறங்களில் குறைந்த அளவு மக்கள் வசிக்கும் பகுதிகளில், வாரத்திற்கு ஓரிரு நாள் மட்டும் செயல்படும் ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறு கிராமங்களில் குறைவான எண்ணிக்கையில் ரேசன் கார்டுதாரர்கள் இருப்பதால், அருகிலுள்ள பெரிய ஊரில் அமைக்கப்பட்டிருக்கும் ரேசன் கடைக்கு மக்கள் அலைய வேண்டியதிருந்தது. இந்த சிரமத்தை குறைக்கவே பகுதி நேர ரேசன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. பெரும்பாலும் இவை வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. மேலும் ரேசன் பொருட்களும் கடைகளில் வீணாகின்றன.

இந்நிலையில், சட்டப்பேரவையில் பகுதி நேர ரேஷன் கடைகள் தொடர்பான கேள்விக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில் பகுதி நேர ரேஷன் கடைகள் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. பகுதி நேர ரேஷன் கடைகளுக்கு பதிலாக நகரும் ரேஷன் கடைகள் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

 

முதல்வரின் ஆலோசனைப்படி நகரும் ரேஷன் கடைகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.இதன்படி பார்த்தால், வாகனம் மூலம் பொருட்களுடன் ரேசன் கடை ஊழியர்கள் கிராமங்களுக்கு சென்று விநியோகம் செய்யும் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் பாராட்டுக்குரிய திட்டம் தான். மக்களிடம் அமோக வரவேற்பையும் பெறும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon