--- --:--:-- --

அமைச்சரை தடுத்து நிறுத்திய போலீஸ் சஸ்பெண்ட்

18

பீஹாரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற அமைச்சரை அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவர் அடையாளம் தெரியாமல் தடுத்து நிறுத்தியதால் அவரை சஸ்பெண்ட் செய்யுமாறு அமைச்சர் உத்தரவிட்டார்.

 

பிஹார் மாநிலம் சிவானில் மருத்துவமனை ஒன்றில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சென்றார். அப்போது பாதுகாப்பு பணியில் நின்று ஒவ்வொருவராக உள்ளே அனுப்பிக் கொண்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் அமைச்சர் என தெரியாமல் அவரை தடுத்து நிறுத்தியுள்ளார்.

 

இதனால் கோபமடைந்த மங்கள்பாண்டே தான் ஒரு அமைச்சர் என்பதைக் கூட அறிந்து வைத்திராமல் தடுத்து நிறுத்திய போலீஸ்காரரை சஸ்பெண்ட் செய்யுமாறு காவல் உயர் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon