பிரசவம் முடிந்த சிறிது நேரத்திலேயே உயிரிழந்த இளம்பெண்

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவம் முடிந்த சிறிது நேரத்திலேயே பெண் உயிரிழந்ததற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வெலி பாளையத்தை சேர்ந்த சரவணன் என்பவரது மனைவி பெரியநாயகி ஆண் குழந்தையை ஈன்றெடுத்த நிலையில் உடல் நலத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.

 

திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு ரத்தப் போக்கை கண்ட மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பெரியநாயகி உயிரிழந்துள்ளார். இதை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.


Leave a Reply