--- --:--:-- --

கோவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா!!

8

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. பாரதியார் பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரியில் 13-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் 1077 மாணவர்களுக்கு இளநிலை பட்டங்களும்,312 மாணவர்களுக்கு முதுகலை பட்டங்களும் வழங்கப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாரதியார் பல்கலை கழக துணைவேந்தர் காளிராஜ், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.பின்னர், பேசிய அவர் மாணவ , மாணவிகள் தற்போது தான் நம்பிக்கை உள்ள வாழ்க்கையை தொடங்கி உள்ளீர்கள் என்றும்,இந்த பட்டத்தின் மூலம் நீங்களே வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொண்டு தொழில்களை தொடங்கி பின் வரும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை அளித்து முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

விழாவில் கல்லூரியின் இயக்குனர் வாசுகி,முதல்வர் லக்ஷ்மணசாமி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon