ரெட் கிராஸ் சொசைட்டி நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழ்நாடு மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கிளை சார்பில் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி பிப்ரவரி 6-ம் தேதி தூத்துக்குடியில் துவங்கியது. இதனை தொடர்ந்து குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு சென்ற இப்பேரணி இன்று காலை ராமேஸ்வரத்தில் மீண்டும் தொடங்கியது. ராமேஸ்வரம் வட்டாட்சியர் ஜப்பார் தொடங்கி வைத்தார். காவல் துணை கண்காணிப்பாளர் எம்.மகேஷ், ரெட் கிராஸ் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ராக் லாண்ட் மதுரம், பங்கு தங்தை தேவசகாயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், உச்சிப்புளி வழியாக ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளி வந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் வரவேற்று, மீண்டும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ரெட் கிராஸ் சொசைட்டியின் ராமநாதபுரம் சேர்மன் எஸ்.ஹாரூண், துணைத்தலைவர் அஸ்மா பாக் அன்வர்தீன், மாவட்ட செயலாளர் எம்.ராக்லாண்ட் மதுரம், பொருளாளர் குழந்தைச் சாமி, தூத்துக்குடி ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் வன்னியராஜன், சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஸ்டீபன்சன், தலைமை ஆசிரியை ஞான லெட்,ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனர்கள் எம்.ரமேஷ், அலெக்ஸ், எம்.பாலமுருகன், இணை கன்வீனர் சத்குரு நிர்வாகக்குழு உறுப்பினர் கே.ராஜன் மற்றும் பெண் கவுன்சலர்கள் 100 பேர் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.