--- --:--:-- --

டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் நாளை பதவியேற்பு

11

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவி ஏற்பு விழாவில் அவருடன் 6 அமைச்சர்களும் பதவி ஏற்க வருகின்றனர். அண்மையில் நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளில், 62 இடங்களை கைப்பற்றியது.

 

மூன்றாவது முறையாக டெல்லி முதலமைச்சராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் பதவி ஏற்பு விழா நாளை ராம்லீலா மைதானத்தில் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த விழாவில் கெஜ்ரிவாலின் கடந்த ஆட்சியில் துணை முதல்வராக இருந்த மணி சிசோடியா மற்றும் பிற அமைச்சர்களான கோபால் ராய், கைலாஷ் கிளாட், இம்ரான் உசேன் மற்றும் ராஜேந்திர கவுதம் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்க இருக்கின்றனர்.

 

டெல்லி காவல்துறை மற்றும் துணை இராணுவப் படையினர் என 3000 பேர் பதவி ஏற்பு விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon