--- --:--:-- --

ஆசிரியர் தாக்கியதால் மாணவிக்கு கண்ணில் காயம்

7

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தனியார் பள்ளி ஆசிரியர் தாக்கியதில் ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு கண்பார்வை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கு பஜார் வீதியில் செயல்பட்டுவரும் அந்த பள்ளியில் வகுப்பறையில் மாணவர்கள் சத்தம் போட்டதால் ஆதிநாராயணன் எனும் ஆசிரியர் மாணவர்களை பிரம்பால் தாக்கியுள்ளார்.

 

அப்போது முத்தரசி என்னும் மாணவியின் கண்ணில் அடிபட்டு ரத்தம் வடிந்து உள்ளது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கும் தெரிவிக்காமல் மாணவியை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 

அங்கு மாணவியின் கருவிழி கிழிந்ததால் அறுவை சிகிச்சை செய்யப் பட்டுள்ளதாகவும் மாணவிக்கு கண்பார்வை திரும்புவது சந்தேகம் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தலைமறைவாகியுள்ள ஆசிரியர் ஆதிநாராயணனை போலீசார் தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon