வயல்வெளியில் அவரசமாக தரையிறக்கப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர்
பஞ்சாப் மாநிலத்தில் இந்திய ராணுவத்தை சேர்ந்த ஹெலிகாப்டர் அவசர அவசரமாக வயல்வெளியில் தரையிறக்கப்பட்டது.
பாட்டியாலாவில் இருந்து புறப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் வானில் பறந்து கொண்டிருந்தபோது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை தகவல் கிடைத்ததையடுத்து ரோவர் என்ற இடத்தில் உள்ள வயல்வெளியில் ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அதில் பயணம் செய்த ராணுவ வீரர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




