--- --:--:-- --

“தக்கலை” க்கு பதில் “தக்காளி” என பதிவிட்ட பயண சீட்டு

4

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலைக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்தில் வழங்கப்பட்ட மின்னனு பயணச்சீட்டில் ஊர் பெயர் தக்காளி என்று அச்சிடப்பட்டிருந்தது கேலி கிண்டலுக்கு ஆளாகி உள்ளது. தேனி மாவட்டம் போடியில் இருந்து மார்த்தாண்டம் அருகே இயக்கப்பட்ட பேருந்தில் தக்கலையை சேர்ந்த மில்டன் என்பவர் பயணித்தார்.

 

அப்போது அவருக்கு வழங்கப்பட்ட பயணச் சீட்டில் தக்காளி என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சீட்டை படம் பிடித்து சமூக வலைதளங்களில் மில்டன் பதிவேற்றம் செய்திருந்தார். தற்போது அது வடிவேலுகாமெடி உடன் சேர்த்து மீம்ஸ்களாக உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon