சாலையை கடந்துச் சென்ற கருஞ்சிறுத்தை

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் கருஞ்சிறுத்தை ஒன்று சாலையை கடந்து சென்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. சிங்காரா வனப்பகுதியில் உள்ள சாலையை அந்த கருஞ்சிறுத்தை கடந்து சென்றபோது அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கருஞ்சிறுத்தை நடமாட்டம் மிகவும் குறைந்துவிட்ட நிலையில், இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.


Leave a Reply