அக்காவை காதலித்த வாலிபரை குத்தி கொலை செய்த தம்பி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சகோதரி உடனான காதலை கைவிட மறுத்த காதலனை கத்தியால் குத்தி கொலை செய்த பெண்ணின் தம்பியை போலீசார் தேடி வருகின்றனர். தாமரைக் குளத்தை சேர்ந்த தினேஷ் குமார் என்ற இளைஞர் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த அப்பெண்ணின் தம்பி மணிகண்டனுக்கும், தினேஷ்குமாருக்கும் அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் தினேஷ்குமார் நேரில் சந்தித்த மணிகண்டன் சகோதரி உடனான காதலை கைவிடுமாறு கூறியுள்ளார்.

அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலின்போது தினேஷ்குமாரை கத்தியால் குத்தி கொலை செய்த மணிகண்டன் தப்பி ஓடிவிட்டார். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




