ஆபாசப்படம், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுவதை தடுக்க நடவடிக்கை
குழந்தைகளின் ஆபாச படம், பலாத்கார வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுவதை தடுக்க வாட்ஸ்அப், கூகுள் நிறுவனங்களிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பின் சார்பில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு நேற்று தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலியல் பலாத்காரம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுவதை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும் என வாதிட்டார்.
இதனை தொடர்ந்து பேசிய நீதிபதி சமூகவலைதளங்களில் பலாத்காரம், ஆபாச படம் பரவுவதை தடுக்க மத்திய உள்துறை சம்மந்தப்பட்ட இணையதள நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மேலும் இது தொடர்பான அறிக்கையை தன்னார்வ அமைப்பின் வக்கில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




