டிக்டாக்கில் கத்தியை காண்பித்து கானாபாடலுக்கு நடித்த 2 சிறுவர்கள் கைது
சென்னை, தாம்பரம் அருகே டிக் டாக்கில் கானா பாடல் ஒன்றுக்கு கத்தியை காண்பித்து நடித்தது மட்டுமில்லாமல் காவல் நிலையத்தின் புகைப்படத்தையும் வீடியோவில் பயன்படுத்திய இரண்டு சிறுவர்கள் கைதாகினர்.
பீர்க்கன்கரணையில் உள்ள கறிகடை ஒன்றில் இரண்டு சிறுவர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் டிக்டாக்கில் கானா பாடல் ஒன்றுக்கு கறி வெட்டும் கத்தியுடன் தங்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தனர்.
அதுமட்டுமின்றி பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் புகைப்படத்தையும் அந்த வீடியோவில் சேர்த்து புள்ளி ங்கோ என பெயரிட்டு பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரல் ஆனதால் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




