--- --:--:-- --

சிறுமியை கர்ப்பமாக்கிய முன்னாள் ரயில்வே ஊழியர்! போக்சோவில் கைது

3.1

ஒழுங்கீன புகாரால் ரயில்வே உதவியாளர் பணியில் இருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு நீக்கம் செய்யப்பட்டவர் சங்கர் ராவ். இவன் கடந்த அக்டோபர் மாதம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை ஏமாற்றி சென்னை திருவொற்றியூரில் உள்ள ரயில்வே குடியிருப்புக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

 

அங்கு சிறுமியை தங்க வைத்து பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து விசாகப்பட்டினத்தில் உள்ள தனது பாட்டியை தொடர்புகொண்ட சிறுமி தான் சென்னையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சிறுமி தனியாக நிற்பதை பார்த்த ரயில்வே போலீசார் அவரை மீட்டு பெரவலூர் குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்தனர், ஏற்கனவே பேத்தியை காணவில்லை என விசாகப்பட்டினம் போலீசில் புகார் அளித்திருந்த பாட்டி ஆந்திர போலீஸ் உதவியுடன் சென்னை வந்து காப்பகத்தில் இருந்த சிறுமியை மீட்டார்.

 

விசாரித்ததில் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவரது பாட்டி திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ரயில்வே குடியிருப்பில் தங்கியிருந்த சங்கரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon