--- --:--:-- --

தஞ்சை பெரிய கோயிலில் நாளை கும்பாபிஷேகம்..! ஏற்பாடுகள் தீவிரம்!!

93adcf2b-2284-4809-ad61-9a9e88ee91f3

தஞ்சை பெரிய கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேகத்தை காண பல லட்சம் பேர் கூடுவார்கள் என்பதால் 10 மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தஞ்சை பெரிய கோயிலில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேகத்தை எந்த மொழியில் நடத்துவது என்பது தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்பட்டது. தமிழில் நடத்த வேண்டும் என ஒரு தரப்பும், சமஸ்கிருதத்தில் நடத்த வேண்டும் என மற்றொரு தரப்பிலும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகள் தொடரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இறுதியில் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என தமிழக அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதால், உயர்நீதிமன்ற கிளை அதற்கு அனுமதியளித்து உத்தரவிட்டதால் சர்ச்சை ஓய்ந்தது.

 

இந்நிலையில் கும்பாபிஷேகத்துக்கான பணிகள் கடந்த 1-ம் தேதி யாகசாலை பூஜையுடன் களைகட்டியது. கும்பாபிஷேகத்திற்கு பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டுள்ளன. தொடர்ந்து 2, 3-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று.

இன்று காலையில் ஆறாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இன்று மாலையில் ஏழாம் கால பூஜைகள் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து நாளை அதிகாலை 4.30 மணியளவில் 8-ம் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக ஏற்பாடுகள் களை கட்டத் தொடங்கி 7 மணிக்கு மேல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

 

28 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகத்தை காண தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் தஞ்சாவூர் நோக்கி படையெடுத்துள்ளனர் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. 10 மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon