15 ஆண்டுகுளாக கொள்ளையர்களை தேடும் திருப்பூர் போலீசார்..! விரக்தியடைந்த தம்பதி!!
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் தனபாலன் சித்ரா தம்பதி, கடந்த 2005ம் ஆண்டு அவர்களது வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுனும் நகை மற்றும் 90ஆயிரம் ருபாயை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து 2005 ம் ஆண்டு திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இது குறித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆனால் 15 ஆண்டுகள் கடந்த நிலையிலும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்குற்றம் சாட்டிய தம்பதி ஆட்சியரிம் நியாயம் கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் இங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தர்ணாவில் ஈடுபட்ட தம்பதி கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளாக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எங்களுக்கு 4 பெண்குழந்தைகள் உள்ளனர். தற்போது குழந்தைகள் வளர்ந்து திருமண வயதை எட்டி விட்டது. இவர்களது திருமணத்தை நடத்துவதற்கும் வழியின்றி உள்ளோம். எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு கொள்ளை சம்பவம் குறித்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.





