--- --:--:-- --

ஊரக உள்ளாட்சித் தேர்தல் : அதிமுகவினர் பதவியேற்க தடை விதிக்கணும்..!! திமுக முறையீட்டை நிராகரித்த நீதிபதி!!

13

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் அதிமுகவினர் வெற்றி பெற்றதாக முறைகேடாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், இதனால் நாளை அவர்கள் பதவியேற்க தடை விதிக்க வேண்டும் என திமுக சார்பில் அவசர, அவசரமாக உயர்நீதிமன்ற நீதிபதியிடம், அவரது வீட்டில் மனு கொடுத்து முறையிடப்பட்டது. ஆனால் இந்த முறையீட்டை ஏற்க நீதிபதி மறுத்து விட்டார்.

 

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு குளறுபடிகளும், முறைகேடுகளும் நடைபெற்றதாக திமுக குற்றம் சாட்டி வருகிறது. வாக்கு எண்ணிக்கை முடிந்து , திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்ற நிலையில், முடிவை அறிவிக்காமல் தாமதம் செய்வதாக, மாநில தேர்தல் ஆணையரிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் முறையிட்டார்.

 

மேலும்பல இடங்களில் திமுக வெற்றி பெற்ற இடங்களில், அதிமுகவினர் வெற்றி பெற்றதாக முறைகேடாக அறிவித்தாகவும் திமுக தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

 

உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் அனைவரும் நாளை பதவியேற்க உள்ளனர். இந்நிலையில், அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர்களை பதவியேற்க தடை விதிக்க வேண்டும் என திமுக சார்பில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

விடுமுறை நாளான இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆதிகேசலுவின் இல்லத்தில், திமுக வழக்கறிஞர்கள் மனு செய்து அவசர உத்தரவு பிறப்பிக்குமாறு முறையிட்டனர்.

 

திருவண்ணாமலை, நாமக்கல், திருவாரூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் திமுகவினர் வெற்றி பெற்ற நிலையில், அதிமுக வெற்றி பெற்றதாக முறைகேடாக அறிவித்துள்ளனர் என்றும், இந்த மாவட்டங்களில் வெற்றி பெற்ற அதிமுகவினர் பதவியேற்க தடை விதிக்குமாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

 

ஆனால், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் அனுமதி இல்லாமல், வழக்கை அவசரமாக விசாரணைக்கு ஏற்க முடியாது எனக் கூறி திமுகவின் முறையீட்டை ஏற்க மறுத்து விட்டார்.

Leave a Reply

Right Menu Icon