--- --:--:-- --

திருப்பூர், 15. வேலம்பாளையம் அருகே  சாரம் ஏற்றி வந்த லாரி மோதி வாலிபர் பலி 

IMG_20200104_150411

திருவாரூர், அத்தங்குடி, நல்லவளம்பேத்தி பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். இவரது மகன் விக்னேஷ் (வயது 24). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

 

இவர் இன்று மதியம் 1.00 மணியளவில்  அம்மாபாளையம், ராமகிருஷண வித்யாலயா பள்ளி பின்புறம் உள்ள சாலையில் 2 சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது 15. வேலம்பாளையத்தில் இருந்து அம்மாபாளையம் நோக்கி  சாரம் ஏற்றி வந்த லாரி விக்னேஷ் ஓட்டி வந்த 2 சக்கர வாகனத்தின் மீது மோதி,  லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது.

 

இதில் விக்னேசுக்கு இடது தலை, கையில் பலத்த காயம் ஏற்பட்டு துடிதுடித்து ரத்தவெள்ளத்தில் அதே இடத்தில பரிதாபமாக இறந்தார். அவர் ஓட்டி வந்த 2 சக்கர வாகனமும் கடும் சேதம் அடைந்தது.  உடனே லாரியை ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அருகில் இருந்தவர்கள் லாரி டிரைவரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

அப்போது அந்த வழியாக  வந்த நமது குற்றம் குற்றமே நிருபர் ராஜா இதுகுறித்து 15. வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். மேலும், 108 க்கு ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர்
விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர்

இதைத்தொடர்ந்து 15 வேலம்பாளையம் போலீசார்  சம்பவ இடத்திற்கு வந்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேதத்தை கைப்பற்றிய போலீசார் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Right Menu Icon