காதலியை சரமாரியாக கத்தியால் குத்திய இளைஞர்
சிதம்பரம் அருகே காதலியை கத்தியால் குத்திய இளைஞர் காவல்துறையில் சரணடைந்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தனலட்சுமி என்ற இளம்பெண் சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் தனது பாட்டி வீட்டில் தங்கி கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
அவருக்கு சக்திவேல் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த தனலட்சுமி பார்க்க சென்று சக்திவேல் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார். இதில் கழுத்து மற்றும் தோள்பட்டையில் பலத்த காயமடைந்த தனலட்சுமி ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரிடம் போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தியுள்ளனர். அதில் காதலர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் இந்த சம்பவம் நிகழ்ந்தது தெரியவந்துள்ளது. இதனிடையே காதலியை கத்தியால் குத்திய சக்திவேல் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




