உதயநிதியுடன் எந்த தொடர்பும் இல்லை : நடிகை ஸ்ரீரெட்டி
திரைப்பட நடிகரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனியில் உள்ள செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீ ரெட்டி, உதயநிதி ஸ்டாலினுக்கும் தனக்கும் தொடர்பு உள்ளதாக பரவி வரும் தகவல்கள் பொய்யானது என்றார். போலி சமூக வலைதளங்கள் மூலம் வதந்திகளை பரப்பி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தொடக்கத்தில் பலரைப் பற்றி புகார் அளித்ததாகவும், ஆனால் உதயநிதி ஸ்டாலினை பற்றி இதுவரை எந்த புகாரும் அளிக்கவில்லை எனவும் குறிப்பிட்ட ஸ்ரீரெட்டி திமுக அதிமுக கட்சிகளுக்கு எப்போதும் தனது ஆதரவு உண்டு என தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




