2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளுக்கு 1 கிலோ அரிசி வழங்கி வாகன பிரச்சாரம்

கும்மிடிப்பூண்டியில் 2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளுக்கு ஒரு கிலோ அரிசி வழங்கி பசுமைத்தாயகம் அமைப்பினர் வாகன பிரச்சாரத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 2 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் முகாமினை பசுமைத்தாயகம் மாநில துணை செயலாளர் பத்மநாபன் தலைமையில், பாமக மாநில துணை தலைவர் செல்வராஜ் துவக்கி வைத்தார்.

 

இதில் ஏராளமான பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்து அரிசியை வாங்கிக் கொண்டனர். மேலும் கும்மிடிப்பூண்டி பகுதி முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் வகையில் பசுமை தாயகம் மற்றும் பாமக சார்பில் வாகன பிரச்சாரம் நடத்தப்பட்டு பலரிடமிருந்து பிளாஸ்டிக் கழிவுகளை பெற்று அதற்கு பதிலாக அரிசி வழங்கப்பட்டது.


Leave a Reply