தலைமை எழுத்தர் லஞ்சம் பெறும் வீடியோ காட்சி!

ராமநாதபுரம் எஸ்பி அலுவலகத்தில் தலைமை எழுத்தர் லஞ்சம் பெறும் வீடியோ வெளியானதை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமார் சில நாட்களுக்கு முன் பதவியேற்றார்.

 

அவரிடம் நிலம் தொடர்பான புகார் ஒன்று வந்துள்ளது. அதனை விசாரிக்க ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு பரிந்துரை செய்தார். இந்த நிலமோசடி புகார் தொடர்பாக குற்றப் பிரிவு அலுவலகத்துக்கு வந்த சாயல் குடியை சேர்ந்த பாலகிருஷ்ணனிடம் எழுத்தர் தர்மர் லஞ்சம் பெற்றதாக வீடியோ ஒன்று காவல் கண்காணிப்பாளர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

 

இந்த வீடியோ குறித்து விசாரணை செய்த காவல் கண்காணிப்பாளர் தலைமை எழுத்தர் தருமரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து நடவடிக்கை எடுத்தார். மேலும் பணியின்போது கவனக் குறைவாக இருப்பதாக கூறி சாயல்குடி பகுதி சார்பு ஆய்வாளர் கோட்டை சாமியையும் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்‌பி நடவடிக்கை எடுத்துள்ளார்.


Leave a Reply