2 நாட்களுக்குப் பின் தங்கம் விலை மெகா சரிவு!
நவம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிகம் சரிந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகத் தங்கம் விலை தொடர் சரிவைக் கண்டு வருகிறது. கடந்த 16 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 15,360 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. ஆனால் திடீரென இரண்டு நாட்களாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.
எதிர்பார்க்காத அளவில் தங்கம் விலை கூடியும் குறைந்தும் வருவதால் நகை பிரியர்கள் குழப்படைந்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று தங்கம் விலை திடீரென அதிரடியாக உயர்ந்தது. (நவம்பர் 24) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.115 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,715க்கும், சவரனுக்கு ரூ.920 உயர்ந்து ஒரு சவரன் ரூ.93,720க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு தங்கம் விலை அதிரடியாக குறைந்திருக்கிறது. அதன்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.295 குறைந்து ஒரு கிராம் ரூ.11,420க்கும், சவரனுக்கு ரூ.2,360 குறைந்து ஒரு சவரன் ரூ.91,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 2 நாட்களில் ரூ.2,000 உயர்ந்த நிலையில் இன்று ஒரே நாளில் ரூ.2,360 விலை குறைந்திருக்கிறது.
அதேபோல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.240 குறைந்து ஒரு கிராம் ரூ.9,345க்கும், சவரனுக்கு ரூ.1,920 குறைந்து ஒரு சவரன் ரூ.74,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்திருக்கிறது. கடந்த சில நாட்களாக மாற்றம் இல்லாமல் இருந்த வெள்ளி விலை இன்று அதிரடியாக கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.165க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




