--- --:--:-- --

திருச்செந்தூரில் பச்சைநிற பாசிகளுடன் தென்பட்ட கருப்பசாமி சிலை

10

திருச்செந்தூரில் கடல் நீர் வழக்கத்திற்கு மாறாகக் கரையில் இருந்து சுமார் 50 அடி தூரம் உள்வாங்கியுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகக் கடலுக்குள் பச்சைநிற பாசிகளுடன் கூடிய சுமார் ஒரு அடி உயரம் கொண்ட கருப்பசாமி சிலை ஒன்று தென்பட்டுள்ளது.

 

 

இப்பகுதியில் இதுபோல் ஏராளமான சிலைகள் அடிக்கடி கரை ஒதுங்குவதால், பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் எந்தவித இடையூறும் இன்றி அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon