சென்னை ஐ.ஐ.டி.யில் எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி உள்ளிட்ட மருத்துவ படிப்புகளையும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சொந்தமாக மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி வளாகத்தை ஏற்படுத்தி தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதி பெற இருப்பதாக, சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.